மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) என்பது மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் கீழ்நிலை அலுவலகங்களில் உள்ள பல்வேறு குரூப் B மற்றும் C பதவிகளுக்குப் பணியாளர்களை நியமிப்பதற்காக 1975-ல் நிறுவப்பட்ட அமைப்பாகும். இது CGL, CHSL மற்றும் MTS போன்ற முக்கியத் தேர்வுகளை நடத்துகிறது.
அந்த வகையில் தற்போது ‘செலக்ஷன் போஸ்ட் ஃபேஸ் 14’ (Selection Post Phase 14 – 2026) என்னும் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணி விவரம்
நாடு முழுவதும் உள்ள சுமார் 3,003 காலியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
கணினி வழியிலான எழுத்துத் தேர்வு நடைபெறும் . கேள்விகள் கொள்குறி வகையில் அமைந்திருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் இந்த தேர்விற்கு SSC-யின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முக்கிய தேதிகள்
மே 4ஆம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 11 முதல் 13ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.







