தமிழகம்

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு தைரியமாக பேச வேண்டும் – ராகுல் காந்தி

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு தைரியமாக பேச வேண்டும் என்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சீன ராணுவம் சிக்கிம் மாநிலத்தில் சாலையும், சாவடி ஒன்றையும் அமைத்திருப்பதாக, ஊடகங்களில் செயற்கோள் படங்கள் வெளியாகி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். சீனாவின் இந்த அத்துமீறல் குறித்து, மத்திய அரசு வெளிப்படையாக பேச வேண்டும் என்றும், ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

அதீதமாக அச்சம் கொள்ளாமல், சீனா குறித்து இன்றே துணிவுடன் பேசுங்கள் என்றும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சிக்கிம் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டியிருக்கும் நாகுலா பகுதியில், ஜனவரி 20-ம் தேதி இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே சிறு மோதல், நடைபெற்றதாக தகவல் வெளியானது.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்  

Ezhilarasan

இலங்கை அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Vandhana

2500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி!

Saravana

Leave a Reply