வேலியின் மீது காதல் கொண்ட அமெரிக்க பெண்!

அமெரிக்க பெண் ஒருவர் வேலியின் மீது காதல் கொண்டு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தில் தன்னை தானே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளானது. அந்த…

அமெரிக்க பெண் ஒருவர் வேலியின் மீது காதல் கொண்டு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத்தில் தன்னை தானே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளானது. அந்த பரபரப்பு ஓய்வதற்குள், அமெரிக்க பெண் ஒருவர் பொருள்கள் மீதான ஈர்ப்பால் உலக அதிசயங்களில் ஒன்றான, ஈஃபிள் டவரை திருமணம் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த எரிகா லப்ரிக்கு வயது 50. வில் வித்தை வீராங்கனையான எரிகா, சமீபத்தில் ஓர் இரும்பு வேலி மீது அமர்ந்து கொண்டு காதலாக பேசிய வீடியோ வைரலானது. அவர் காதலாக பேசியது வேறு யாரிடமும் இல்லை. அந்த இரும்பு வேலி மீது தான். இதுகுறித்து எரிகாவே ஓர் நீண்ட விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

தான் உடல் அளவில் உயிரற்ற வேலி மீது ஈர்க்கப்பட்டிருப்பதாக மனம் திறந்திருக்கிறார். ஆம்.. எரிகா லப்ரிக்கு உயிரற்ற பொருள் மீது ஈர்ப்பு அதிகம். ‘வேலிகள் ஆபத்தாக தோன்றினாலும், அதன் மீதான காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை. இதன் வடிவம் மிகவும் பொருத்தமாக இருக்கும். வேலிகளிடம் நேரடியாக பேசவும் செய்கிறார். எப்போதும் வேலியை ‘ஸ்வீட்’ என கொஞ்சுவாராம்.

கடந்த 2007 ஆம் ஆண்டே பிரான்ஸில் உள்ள ஈஃபிள் டவரை திருமணம் செய்திருக்கிறார். அப்போதே திருமணத்தை நிகழ்ச்சியாகவும் கொண்டாடியிருக்கிறார். ஈஃபிள் டவரை திருமணம் செய்த பிறகு தனது பெயருக்கு பின்னால் ஈஃபிள் (எரிகா ஈஃபிள்) என்பதை குடும்பப் பெயராக இணைத்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஃபிள் டவர் உறவை முடித்த அவர், தற்போது ஒரு வேலியுடன் காதல் செய்கிறார். உயிரற்ற பொருள்கள் மீதான ஈர்ப்புக்கான வழக்கறிஞராகவும் செயல்படுகிறார். ‘ஈஃபிள் டவருக்கு எப்போதும் என் இதயத்தில் இடமுண்டு. அதேநேரத்தில் இந்த வேலி மிகவும் அற்புதமான.’ என கூறுகிறார் எரிகா.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.