திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் -கோயில் நிர்வாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் கோவிலில் நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன் ஆகியோர் பேட்டியில் தெரிவித்தனர்.

பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தனி அறை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டுப்பாடுகளை கோவில் வளாகங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் அறிவிப்பு செய்து பின்னர் விரைவில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

அத்துடன், டீ சர்ட் , ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிலில் தரிசன நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகளை யாரும் நம்ப வேண்டாம். 300 கோடி பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வந்தாலும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.