பிரபலங்களின் ‘#BlueTick” அதிரடி நீக்கம்: ட்விட்டரை ‘Troll’ செய்யும் நெட்டிசன்கள்

எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கையால் உலகளவில் உள்ள பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், தங்களது ட்விட்டர் கணக்கில் ‘புளூ டிக்’ வசதியை இழந்ததை அடுத்து, தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் மீம்ஸுகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு,…

எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கையால் உலகளவில் உள்ள பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், தங்களது ட்விட்டர் கணக்கில் ‘புளூ டிக்’ வசதியை இழந்ததை அடுத்து, தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் மீம்ஸுகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ட்விட்டரிலும் #BlueTick என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

பிரபல சமூகவலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதில் முன்னறிவிப்பு இன்றி ஊழியர்கள் பணி நீக்கம், இனி ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் பெற வேண்டும் என்றால் கட்டாயம் சந்தா செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு போன்றவை மிக குறிப்பிடத்தக்கவை.

குறிப்பாக, பயனாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் ப்ளூ டிக் என்கிற நீல நிற குறியீடு (Blue Tick) இனி இலவசமாக வழங்கப்படமாட்டாது. இதனைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மாத கட்டணமாக இணையத்தில் ரூ.650-ம் மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900-மும் கட்டாயம் செலுத்த வேண்டும் என்கிற அறிவிப்பு இணைய உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் இதற்கான காலக்கெடுவாக துவக்கத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு பின்னரும் பலர் அந்த வசதியை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் சந்தா செலுத்தாவிட்டால் ப்ளூ டிக் வசதி துண்டிக்கப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறையும் காலக்கெடு கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளில் புளூ டிக் திடீரென நீக்கப்பட்டுள்ளது.

இதனையும் படியுங்கள்: ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம்; ட்விட்டர் அதிரடி!

இந்த அதிரடி நடவடிக்கையால் உலகளவில் உள்ள பல பிரபலங்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் தற்போது தங்களது ட்விட்டர் கணக்கில் ‘புளூ டிக்’ வசதியை இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட்
கோலி, ரோகித் சர்மா துவங்கி நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளுக்கான ப்ளூ டிக் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர அரசியலில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி துவங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் தகவலாகவும்,
மீம்ஸுகளாகவும் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ட்விட்டரிலும் #BlueTick என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ரிக்கி ஜெராவிஸ் போன்றோரும் தங்களது ‘புளூ டிக்’ நீக்கம் குறித்து நகைச்சுவையான கருத்துகளை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

https://twitter.com/prakashraaj/status/1649167205609754625?s=20

 

இதில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், “Be bye #BlueTick… நீங்கள் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.. என் பயணம்.. எனது உரையாடல்கள்.. எனது பகிர்வு… என் மக்களுடன் தொடரும்… நீங்கள் சரியாக பார்த்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/babarazamking_/status/1649122650055385089?s=20

இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், “ட்விட்டர் மிகவும் வேடிக்கையான இடம். எனது ரசிகர் கணக்கில் ப்ளூ டிக் உள்ளது. ஆனால் என்னோடத்தில் இல்லை என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/rickygervais/status/1649131776936144899?s=20

இவர்களை தொடர்ந்து, பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ரிக்கி ஜெராவிஸ், “என் ப்ளூ டிக் போய்விட்டது. உண்மையில் இது நானா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Troll_Fotballl/status/1649124499449868288?s=20

இது தவிர, சிலர் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் ‘புளூ டிக்’ இழந்தது குறித்தும் வேதனை தெரிவித்தனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ ப்ளூ டிக் இழந்ததைப் பற்றி, ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார். அதில் “ரொனால்டோ தனது நீல நிற டிக் இழந்தார். இனி அவர் பிரபலம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

https://twitter.com/kaleshiaurat/status/1649121758769991680?s=20

அதேபோல் இன்னொரு பயனர், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஸ்கிரீன் கிராப்புடன் ட்வீட் செய்து, “எனது கணக்கில் ப்ளூ டிக் உள்ளது, ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் SRK க்கு அது இல்லை” என்று கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.