சின்ன தடாகம் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்!

கோவை சின்னதடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலையில் காட்டு யானைகள் புகுந்து சாலைகளில் உலா வந்தன. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அருகிலுள்ள சின்ன தடாகம் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து…

கோவை சின்னதடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலையில் காட்டு யானைகள் புகுந்து சாலைகளில் உலா வந்தன.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அருகிலுள்ள சின்ன தடாகம் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் உலா வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் இன்று அதிகாலையில் எட்டுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.

யானைகள் ஒரு மணி நேரத்துக்கு மேல் சாலைகளில் வலம் வந்து சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினார். கோடை காலம் தொடங்கியதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்து யானகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.