பிரபல யூடிப்பரான சப்னா சௌத்ரியின் பாடலுக்கு விமானத்தில் பயணிகள் ஆட்டம் போடும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இசைக்கு மயங்காதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்று கூறலாம். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போதும், நாம் வருத்தத்தில் இருக்கும் போது என அனைத்து நிலைகளிலும் இசை நம் கூடவே பயணிக்கிறது. இசைக்கு மொழி தேவையில்லை.
வட இந்தியாவில் மிகப்பெரிய ஹரியான்வி நடன கலைஞராகவும், பிரபல யூடியூபராகவும் விளங்குபவர் சப்னா சௌத்ரி. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். இவரின் இசைநிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
சப்னா சௌத்ரியின் “தேரி ஆக்யா கா யோ காஜல்” பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும். தற்போது இந்த பாடலுக்கு விமானத்தில் பயணிகள் அனைவரும் நடனமாடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விமானத்தில் பயணித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜேகே என்று அழைக்கப்படும் ஜெய் கர்மானியால் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், 37,000 அடி உயரத்தில் ஒலித்த சப்னா சௌத்ரியின் பாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.







