முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையில் இந்தாண்டுக்கான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் உடல்நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களின் உடல்நலன் முக்கியம் என்பதால், வேறு எதிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்களின் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான மதிப்பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வழிமுறையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சருடன் நாளை அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Advertisement:

Related posts

பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்: முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

கணவனை அடித்து கொலை செய்த மனைவி!

Jeba

ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சிகளுக்கு ஏப்ரல் 1 ஆக மாற்றிவிடுங்கள்: கமல்ஹாசன்

Ezhilarasan