புதுச்சேரி தனியார் பாரில் நேற்று பவின்சர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற தகராரில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முக பிரியன் உயிரழ்ந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரது உடலை உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கொலையில் தொடர்புடையதாக அசோக் ராஜ், பவுன்சர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறை நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுகிறது என்றும் இந்த கொலையில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனியார் பார் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது,
”நேற்று ரெஸ்டோ பாரில் நடைபெற்ற கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரெஸ்டோ பார்களை கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ரெஸ்டோபார்கள் மூட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஒரு சில சம்பவங்கள் இது போல் நடைபெறுகிறது. இது போல் நடைபெற்றால் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.
காவல்துறை நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது. காவல்துறை சுயமாக முடிவெடுத்து அவர்கள் பணிகளை செய்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறையில் தலையிட்டது போல் நாங்கள் செய்வதில்லை. தவறுகளில் ஈடுபடும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரெஸ்டோ பார் கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் சிபிஐ சிபிஐ என்றால் இங்க இருக்கம் காவல்துறை அதிகாரிகள் எதற்கு? உடனடியா இந்த வழக்கில் யாரையும் கைது செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சிபிஐ விசாரணை வைக்கலாம். ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
தகுதி உள்ளவர்கள் அரசுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு மதுபான பார்கள் வைப்பதற்கு அரசு அனுமதித்து வருகிறது. நான் என்ன சாதனை செய்தேன் என்று புதுச்சேரி மக்களுக்கு தெரியும் ஐந்து வருடங்களில் நாராயணசாமி என்ன சாதனை செய்தார் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும். ஒரு துரும்பையும் கில்லி போடாத முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எங்களைப் பற்றி குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை” என்று தெரிவித்தார்







