பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுசில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை அவரது பள்ளிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபாவை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். சிவசங்கர் பாபாவிடம் 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த, நீதிபதி தமிழரசி அனுமதி வழங்கினார். இதனையடுத்து இன்று கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அங்கு கூடியிருந்த சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளியில் சீல் வைக்கப்பட்டு இருந்த சிவசங்கர் பாபாவின் அறைக்கு சிவசங்கரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார். மாணவிகளை பாலியலில் வன்கொடுமை செய்தது குறித்து, சிவசங்கர் பாபாவிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.