நாகை கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையவில்லை! குறுவை சாகுபடியை காக்க முறையின்றி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!

நாகை மாவட்டம் கடைமடை பகுதியை சேர்ந்த விளைநிலங்களுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை சாகுபடியை காக்க முறையின்றி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து…

நாகை மாவட்டம் கடைமடை பகுதியை சேர்ந்த விளைநிலங்களுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை சாகுபடியை காக்க முறையின்றி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து
திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடிகளை
நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளில் மேற்கொள்வர். அந்த வகையில் கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் மேட்டூர் அணையிலிருந்து குருவை சாகுபடிக்காக காவிரி நீரை திறந்து வைத்தார். இதையடுத்து கடைமடை பகுதியான நாகை, கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு
நிர்ணயக்கப்பட்டுள்ளது. ஆனால் இலக்கை விட கூடுதலாக சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்
விவசாயிகள். இந்நிலையில் காவிரி நீர் கடந்த மாதம் நாகை மாவட்டத்திற்கு
வந்தடைந்தது. ஆனால் தண்ணீர் ஆறுகளில் வந்ததே தவிர வாய்க்கால்கள், வயல்களுக்கு
வந்து சேரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு
குறைவாக இருப்பதால் வாய்க்கால்களுக்கும், வயல்களுக்கும் வருவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், பாசனத்திற்கு போதிய தண்ணீர்
கிடைக்காததாலும் நேரடி தெளிப்பு செய்யப்பட்ட விதைகள் கருகி முளைப்பு தன்மை
இழக்கும் நிலையில் உள்ளது.

வாய்க்காலுக்கும் தண்ணீரைக் கொண்டு சேர்த்த டீசல் இன்ஜின் பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு 18 மணி நேரம் தேவைப்படும். அதற்கு 30 லிட்டர் டீசல் சுமார் 3,000 க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் வயல்களில் தெளிக்கப்பட்ட விதை நெல் மணிகளை மயில்கள், புறாக்கள் சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

நீரை சிக்கனப்படுத்த நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த நெல்மணிகளை காப்பாற்றுவதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே முறையின்றி தண்ணீர் திறந்தால் மட்டுமே நேரடி தெளிப்பு செய்யப்பட்ட விதை நெல்களையும், இளம் நாற்றுகளையும் காப்பாற்ற முடியும் என விவசாயி தெரிவித்துள்ளனர்.

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வராத நிலையில் கூடுதல் நீர் திறக்க
வேண்டும் எனவும் காவேரி நதிநீர் பங்கேட்டில் தமிழர்களுக்கான நீரை அரசு பெற்று
விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை அவர்கள் விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.