சிக்னலை மீறி சென்ற நடிகர் விஜய் கார் – ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை!

நடிகர் விஜய் கார் சிக்னலை மீறி சென்றதால் போக்குவரத்து காவல்துறை அவரது வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். கடந்த ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 11வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி…

நடிகர் விஜய் கார் சிக்னலை மீறி சென்றதால் போக்குவரத்து காவல்துறை அவரது வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கடந்த ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 11வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தொகுதி பொறுப்பாளர்களுக்கான பாராட்டு விழா பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் கார் வேகமாக சென்றது. அப்போது  அக்கறை சந்திப்பில் விஜய் கார் சிக்னலை மீறி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 500 ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான ரசீதும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் பயணம் செய்த  கார் வேகமாக சென்றதும், சிக்னலை மதிக்காமல் சென்ற காட்சிகள் தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அதனடிப்படையில் வழக்குப் பதிவு  செய்ததாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.