தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அவ்வப்போது கூடி முடிவு செய்கின்றன.
இந்த நிலையில், இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 141 ஆவது கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வீதம் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
அவ்வாறு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வீதம் 15 நாட்கள் திறக்கப்பட்டால் 11.66 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும். இந்த பரிந்துரை தொடர்பாக விவாதம் செய்து நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




