“காவிரி விவகாரம்: முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்

காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என்பதற்கு முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்.

காவிரி – மிக உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சனை. காவிரி பிரச்சனையை பயன்படுத்தி தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் செய்வது அவர்களின் வாடிக்கை. 2028ல் அங்கு தேர்தல் வர இருக்கிறது. ஆகவே, அவர்கள் காவிரி சிக்கலை இன்னும் கூர்மைப்படுத்துவதற்கு தான் வாய்ப்பு உள்ளது.

இந்திய பிரதமரை தமிழக முதல்வர் சந்திக்க வேண்டியது இன்றியமையாத தேவை.
அதற்கு முன்னர் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டும்.

மிக உணர்வுப்பூர்வமான் பிரச்சனை என்பதால் நிதானமாக முடிவெடுக்கலாம் என அரசு நினைக்கலாம். கர்நாடக முதல்வரை சந்திக்க நினைத்தார்கள். அங்குள்ள சூழல் சரியில்லாததால் சந்திக்கவில்லை. என்ன முடிவெடுக்கிறார்கள் என பார்க்கலாம்.” இவ்வாறு அவர் கூரினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.