கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை! பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!

உதகையில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எச்.பி.எப், தலைக்குந்தா, ரோஸ் மவுண்டன்…

உதகையில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எச்.பி.எப், தலைக்குந்தா, ரோஸ் மவுண்டன் உள்ளிட்ட பகுதியில் அண்மை காலமாக புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வன பகுதியில் இருந்து வெளியேறும் புலி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேய்ச்சல் நிலங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 5 மாதங்களில் 18க்கும் மேற்பட்ட வளர்ப்பு கால்நடைகளை புலி தாக்கிக் கொன்ற நிலையில், நேற்று இரவு உதகையிலிருந்து கூடலூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தலைக்குந்தா பகுதியில் சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு எருதை வேட்டையாடி கொன்று அருகில் உள்ள முட்புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது இரவு நேரம் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் புலி உறுமலின் சத்தத்தை கேட்டு சாலை ஓரம் உள்ள வனப்பகுதியில் பார்த்தபோது வளர்ப்பு எருதை புலி வேட்டையாடி கொன்றதை கண்டு அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இதனால் தலைக்குந்தா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ந்து வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதகை வனத்துறையினர் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வளர்ப்பு கால்நடைகளை வனப்பகுதியின் அருகே மேய்ச்சலுக்கு அனுப்பவோ, பொதுமக்கள் தனியாக செல்லவோ வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.