உலகின் விலை உயர்ந்த உணவு எங்கு தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவு உலகின் மிக காஸ்டிலியான உணவு என்ற  சாதனையை படைத்துள்ளது.  ஒசாகாவில் உள்ள ஒரு உணவகம் உலகின் மிக விலையுயர்ந்த சுஷியை உருவாக்கிய சாதனை படைத்துள்ளது. இந்த சுஷியின்…

ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவு உலகின் மிக காஸ்டிலியான உணவு என்ற  சாதனையை படைத்துள்ளது. 

ஒசாகாவில் உள்ள ஒரு உணவகம் உலகின் மிக விலையுயர்ந்த சுஷியை உருவாக்கிய சாதனை படைத்துள்ளது. இந்த சுஷியின் சிறப்பு என்ன என்று யோசிக்கிறீர்களா?அப்படி என்னதான் இருக்கிறது அந்த உணவில்? இந்த சுஷி தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் ஜப்பான் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகிறது.

உதாரணமாக, மாட்சுடேக் காளான்கள் சீனாவிலிருந்தும், கருப்பு உணவு பண்டங்கள் இத்தாலியிலிருந்தும், திமிங்கல இறைச்சி வட அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்தும் வருகின்றன. மீன் ஜப்பான் முழுவதிலும் இருந்து பெறப்படுகிறது

சுஷியின் 20 துண்டுகளை உள்ளடக்கிய ‘கிவாமி ஓமகேஸ என்ற உணவை ஜப்பானின் பாரம்பரிய முறைப்படி அந்த உணவனம் தயாரிக்கிறது. இநத உணவின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2 லட்சம் ஆகும்.

உலகின் மிக விலையுயர்ந்த சுஷிக்கான சாதனையை இதற்கு முன்பு செஃப் ஏஞ்சலிட்டோ அரனேட்டா ஜூனியர் வைத்திருந்தார். அவர் உணவருந்தியவர்களிடம் 91,800 பிலிப்பைன் பெசோக்கள் சுமார் ரூ.1 லட்சம் ரூபாய் வசூலித்தார். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.