சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுவதாக அங்கு பணியாற்றும் உதவிப் பேராசிரியர் ஒருவர், பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு சென்னை ஐஐடி-யில் மாணவி பாத்திமா உயிரிழப்பு செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, ஐஐடியில் ஜாதி மற்றும் மத பாகுபாடு நிலவுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், சாதி ரீதியான பாகுபாட்டின் காரணமாக ஐஐடியில் இருந்து வெளியேறுவதாக உதவிப்பேராசிரியர் விபின் புதியதாத் வீட்டில் என்பவர் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். ஐஐடி நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.







