புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும், திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 நபர்களுடன் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு பின்னர் இன்றுமுதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் பிரம்மம் எனும் மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில், சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.மேலும் பல சினிமா படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறினர்.







