கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உத்தரபிரதேசத்தில் ‘தங்க பாபா’ என்று அழைக்கப்படும் ஆனந்த் மகராஜ் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் தங்கத்தாலான முகக்கவசம் அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் பகுதியில் வசித்துவருகிறார் மனோஜ் ஆனந்த் மகராஜ். தங்க நகைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட மனோஜ் மகராஜ் தினமும் இரண்டு கிலோ தங்க நகைகள் அணிந்துகொண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தங்க நகைகள் மீது இவர் கொண்ட ஆர்வம் காரணமாக அப்பகுதி மக்கள் இவரை ‘தங்க பாபா’ என்றே அழைக்கிறார்கள். தங்கத்தாலான சங்கு மாலை, மீன் மாலை அனுமன் லாக்கெட், தங்கத் தோடு ஆகியவை தங்கப் பாபாவின் அடையாளமாகும்.
தங்க பாபாவிடம் மூன்று தங்க பெல்டுகள், ரிவால்வர் வைக்க தங்க பை ஆகியவற்றை வைத்துள்ளார். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தங்க முகக்கவசத்தை அணிந்து பக்தர்களுக்குக் காட்சி அளிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த தங்க முகக்கவசத்தினுள் 36 மாதங்கள் வரை வரும் சானிடைசர் பொருத்தப்பட்டுள்ளது. கொரோனா போன்ற நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இந்த தங்க முகக்கவசத்திற்கு ‘சிவசரன் முகக்கவசம்’ என பெயர் வைத்துள்ளார் தங்க பாபா. அதிகளவு தங்க நகை அணிந்துகொண்டு இருப்பதால் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்தி இரண்டு நபர்களை எப்போதும் தன்னுடன் வைத்துள்ளார் தங்க பாபா.