அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: வானதி சீனிவாசன் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக்கோரி பா.ஜ.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக…

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக்கோரி பா.ஜ.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார் .

கோவையில் அவினாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கூட்டத்தை சேர்த்தல், கொரோனா தொற்று வழிகாட்டு விதிமுறைகளை மீறியது உள்பட 3 பிரிவுகளின் கீழ், வானதி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட 14 பேர் மீது பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.