முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில், அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி, சென்னையில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், காளிகாம்பாள் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில், அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில், நாகராஜா கோயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்து, பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement:
SHARE

Related posts

கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை

Gayathri Venkatesan

ரயில் பயணத்தின் போது செல்போனுக்கு சார்ஜ் போடத் தடை- ரயில்வே நிர்வாகம் அதிரடி!

Halley karthi

கார் ஓடையில் கவிழ்ந்து இளம் நடிகை காதலருடன் பலி

Ezhilarasan