தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றிரவு தஞ்சையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கிருஷ்ணகுமாரை ஆதரித்து அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி அரசியல் கட்சிகள் இரவு 10 மணி வரை தான் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தஞ்சையில் நேற்று இரவு சீமான் மேற்கொண்ட பரப்புரை இரவு 10 மணியை கடந்தும் நடைபெற்றதாகவும் காவல்துறையினர் அறிவுறுத்தியும் பரப்புரை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.







