சோனியாவின் உதவியாளர் பி.பி.மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட உதவியாளரான பி.பி.மாதவனுக்கு (71) எதிராக எழுந்த  பாலியல் புகார் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி உத்தம் நகர் காவல் நிலையத்தில் இந்திய…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட உதவியாளரான பி.பி.மாதவனுக்கு (71) எதிராக எழுந்த  பாலியல் புகார் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டெல்லி உத்தம் நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பி.பி.மாதவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தலித் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

அந்தப் பெண்ணின் கணவர் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 2020 வரை ஊழியராகப் பணிபுரிந்தவர் ஆவார். அவர் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து மாதவன் கூறுகையில், “எனக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் சதி அடங்கியிருக்கிறது” என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் எம்.ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

– பரசுராமன்.ப

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.