ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக்கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொங்கல், குடியரசு தினம், தமிழ் வருடப்பிறப்பு, சுதந்திர தினம், தீபாவளி ஆகிய நாட்களில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவுக் கட்டணம் கடந்த 2012-ம் ஆண்டிற்கு பின் உயர்த்தி வழங்கப்படாத நிலையில், தற்போது பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூபாய் 20ல் இருந்து ரூபாய் 40 ஆகவும், கல்லூரி விடுதி ரூபாய் 40-ல் இருந்து ரூபாய் 80 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 1,25,295 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான செலவினத்துக்கு ரூ.1.14 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.







