குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை சென்னை வர இருப்பதை முன்னிட்டு, குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு நாளை வருகிறார். ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரும் அவர், டெல்லியில் இருந்து நாளை காலை 10 மணிக்குப் புறப்படுகிறார். நண்பகல் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் படத்திறப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் பயன்படுத்தக்கூடிய குண்டு துளைக்காத காரின் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து, தலைமைச் செயலகத்திற்கும், அங்கிருந்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு வரும் வகையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.