பட்டுக்கோட்டை அருகே கார் விபத்து: 4 பேர் உயிரிழப்பு… 7 பேர் படுகாயம்…

பட்டுக்கோட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பக்கவாட்டு சுவரில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் மூணாவயல் பகுதியை சேர்ந்த 11…

பட்டுக்கோட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பக்கவாட்டு சுவரில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம் மூணாவயல் பகுதியை சேர்ந்த 11 பேர் நேற்று இரவு காரில்
வேளாங்கண்ணி சென்றுள்ளனர்.  அப்போது,  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்,  சாலையோரம் இருந்த பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.  மேலும்,  படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்துள்னர்.

இதன்படி சின்னபாண்டி,  பாக்கியராஜ்,  ஞானம்மாள்,  ராணி ஆகிய 4 பேரும் உயிரிழந்த நிலையில்,  மற்ற 7 பேரும் அருகில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து,  மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  இதையடுத்து இறந்த நால்வரின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.