ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!

வேலூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த கார் நீரோடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோ்ந்த  சுப்பிரமணியன்…

வேலூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த கார் நீரோடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோ்ந்த  சுப்பிரமணியன் குடும்பத்தினர்கள் அவருக்கு சொந்தமான காரில் திருவெண்காடு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு வீடு திரும்பிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில்  ஓட்நரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள நீரோடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நபர்கள் அபாய குரல் விட்டதில் அருகில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கிக் கொண்ட நபர்களை உடனடியாக மீட்டு அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் காரில் பயணம் செய்த 5 சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட 10 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அவர்களுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான காரை மீட்டெடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.