கர்நாடக பாஜக அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பு – அலறியடித்து ஓடிய தொண்டர்கள்

கர்நாடக பாஜக அலுவலகத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் தொண்டர்கள் அலறியடித்து  ஓடினர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட…

கர்நாடக பாஜக அலுவலகத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் தொண்டர்கள் அலறியடித்து  ஓடினர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்பதால், இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.

காலை 9 மணி நிலவரப்பட்டு காங்கிரஸ் கட்சி 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 93 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான சிக்கோனில் உள்ள பாஜக  முகாம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வருகை தந்தார். அப்போது பாஜக முகாம் அலுவலகத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அங்கிருந்த தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். முதலமைச்சர் முன்னிலையில் அதிகாரிகள் நல்ல பாம்பை பாதுகாப்பாக அப்புறப்படுய்த்தினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.