மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈகை எனும் அருங்குணத்தால் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் அன்பிற்கினிய நண்பர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று. அவருடனான நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.







