”கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் டீசர்: படக்குழு வெளியிட்ட அப்டேட்!

தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் ஜூலை 28-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன்…

தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் ஜூலை 28-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலீம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.

https://twitter.com/SathyaJyothi/status/1683477197707681792

அந்த வகையில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 28-ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.