‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ சிவப்புக் கம்பள வரவேற்பில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் வெள்ளை நிற சிண்ட்ரெல்லா உடையில் தோன்றி காட்சியளித்தார்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் இன்று தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறும் 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ இன்று தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.
இந்த விழாவின் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு சீதா ராமம் புகழ் மிருணாள் இதில் முதன்முறையாக கலந்துக்கொள்கிறார். இதற்காக இவர்கள் அனைவரும் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் பயணமான புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், இன்று தொடங்கியுள்ள ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ சிவப்பு கம்பள நிகழ்வில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்துள்ளார். மேலும் அவர் தனது உடையில் வெள்ளை நிற சிண்ட்ரெல்லா போல காட்சியளித்தார்.
பாலிவுட்டின் மிகப்பெரும் நட்சத்திரங்கள் மற்றும் உலக அழகி சகோதரிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரின் பாதையை பின்பற்றி, மனுஷி சில்லர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து தோன்றியது பலரையும் வெகுவாக கவர்ந்தது. மனுஷி சில்லர் ஜான் ஆபிரகாமுடன் ‘டெஹ்ரான்’ மற்றும் வருண் தேஜுடன் ‘ஆபரேஷன் வாலண்டைன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா