தோனி கேண்டி கிரஷ் கேம் விளையாடும் வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து பலரும் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் டவுன்லோடு செய்து விளையாடி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தாலும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் சிறிதும் குறைந்தபாடில்லை. அவரது சிறுசிறு நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளிவந்தாலும் ரசிகர்கள் அதை ஆர்வத்துடன் பார்த்து டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், அது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.
இந்நிலையில் கேப்டன் மகேந்திர சிங் டோனி கேண்டி க்ரஷ் விளையாடும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. விமானத்தில் இருக்கையில் அமர்ந்துள்ள டோனி தன்னுடைய டேப்பில் கேண்டி க்ரஷ் விளையாடுகிறார். அவருக்காக சாக்லேட் மற்றும் பிஸ்கட்களை எடுத்துக் கொண்டு விமான பணிப்பெண் தோனி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு சென்று அவரிடம் எடுத்துக் கொள்ளுமாறு தட்டை நீட்டுகிறார். அதற்கு தோனி பணிப்பெண்ணிடம் சிரித்தப்படி மகிழ்ச்சியாக நன்றி தெரிவிக்கிறார்.
https://twitter.com/teams_dream/status/1672944660250238976
தோனியின் இந்த வீடியோ ட்ரெண்டாகி வரும் நிலையில், அவர் தனது டேப்பில் விளையாடிக் கொண்டிருந்த கேண்டி க்ரஷ் கேமும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த கேண்டி கிரஷ் கேமை அவரது ரசிகர்கள் டவுன்லோடு செய்து விளையாடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியான உடன் கேண்டி கிரஷ் விளையாட்டிற்கு மவுசு கூடி பலரும் டவுன்லோடு செய்த நிலையில், 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளதாக Candy Crush நிறுவனம் தெரிவித்துள்ளது.







