முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை ரயில் நிலையத்தை ரூ.358 கோடி மதிப்பில் புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி

மதுரை ரயில் நிலையத்தை ரூ.358.63 கோடி மதிப்பில் புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை, சென்னை, ராமேஸ்வரம், காட்பாடி உட்பட ஐந்து ரயில் நிலையங்கள் அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்ற மே 26 தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தை புணரமிக்க 358.63 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணியினை 26 மாதங்களுக்குள் முடிக்க ஐஆர்சிஓஎன் – இன்டர்நேஷனல் லிமிடெட் (Ircon International Limited) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பார்சல் சேவைக்கு தனி வளாகம், பல்லடக்கு வாகன காப்பகம், சுரங்கப்பாதை கூடுதல் அலுவலக கட்டிடம் என சுமார் 16 வகையான பணிகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வேக்கு கீழ் செயல்பாடு இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளது.

தென் தமிழகத்தை இணைக்கும் மிக முக்கியமான நகரமான மதுரையில் ரயில் நிலையத்தின் பங்கும் அதிமுக்கிய பங்களித்து வருகிறது.

மின் ஏணி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பொருள்களை சோதிக்கும் இயந்திரம், ஏடிஎம் வசதிகள், உயர்தர உணவகங்கள், பயணிகளுக்கு ஏசி ஓய்வறை உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கி இருக்கிறது மதுரை ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?

EZHILARASAN D

சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்லை: ரஜினிகாந்த்

EZHILARASAN D

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று ஒரேநாளில் 3,581 பேர் பாதிப்பு!

G SaravanaKumar