முக்கியச் செய்திகள் தமிழகம்

10,12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய அளவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும், தமிழகத்தில் 5 ஆயிரத்தையும் கடந்துவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் கண்டிப்பாக மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்றும், இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியல்: 2-வது முறையாக முதலிடம் பிடித்த இந்திய வம்சாவளி மாணவி!

G SaravanaKumar

கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!

டிரோன் மூலம் பயிர்களுக்கு உரத்தெளிப்பு – வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் –

Web Editor