கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி அபராதம் இல்லையாம்… எதற்கு தெரியுமா?

ஜூன் 1 முதல் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.

பொதுவாக அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக்கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லாவிட்டால், அதற்கு என தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.

அந்த வரிசையில் அரசால் நடத்தப்படும் கனரா வங்கியில், நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.2 ஆயிரம், சிறிய நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.1,000, கிராம பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் ரூ.500 என குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அதற்கு ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சராசரி மாதாந்திர இருப்பு (AMB) தேவையை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. அதன்படி கனரா வங்கியில் சேமிப்புக் கணக்குகள், சம்பளக் கணக்குகள், என்ஆர்ஐ சேமிப்புக் கணக்குகள் மற்றும் பிற சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி குறைந்தபட்ச இருப்புத்தொகை காரணமாக அபராதம் விதிக்கப்படாது என கனரா வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி தான் முதல்முறையாக இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது.  வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனரா வங்கி கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.