கோடையில் பழச்சாறு அருந்தலாமா? இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

பழச்சாறை அருந்துவதால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக…

பழச்சாறை அருந்துவதால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.  கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.

அதன்படி,  உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  நாம் பொதுவாக வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க பழச்சாறை விரும்பி பருகுவோம்.  ஆனால் பழத்தை அப்படியே எடுத்துக் கொண்டால் தான் அனைத்து ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கும் என்றும்,  பழச்சாறை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் என்றும் கூறுகின்றனர்.  அந்த வகையில் பழச்சாறு அருந்துவதால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

  • பழங்களை அப்படியே எடுத்துக் கொண்டால் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
  • ஆனால், நாம் பழங்களை பிழிந்து சாறு எடுக்கும்போது,  அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நீக்கப்படுகிறது.
  • நார்ச்சத்து நமது உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நார்ச்சத்தை தவிர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயரும்.
  • பழத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும்போது, நமது வயிறு நிரம்பி,  அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படும்.
  • ஆனால் பழச்சாறை குடிக்கும்போது, அவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள தூண்டும்.  அவ்வாறு தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, உடல் எடை அதிகரிக்கும்.
  • பழத்தை பிழிந்து சாறு எடுக்கும்போதே, அதில் இருக்கும் பெரும்பாலான ஊட்டச்சத்துகளும் போய்விடும்.

  • குறிப்பாக,  விட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் எனப்படும் ஆக்சிஜனேற்றிகள் ஆகியவை பழச்சாறுகளில் மிகவும் குறைந்துவிடும்.
  • அதே நேரத்தில் பழச்சாறை உடனடியாக குடிக்காவிட்டால்,  மீதம் இருக்கும் ஊட்டச்சத்துகளும் அழிந்துவிடும்.
  • பழச்சாறில் அமிலமும், இயற்கையான சர்க்கரையும் இருக்கிறது.  இவை பற்சிதைவு மற்றும் ஈறு பாதிப்புக்கு காரணமாக அமையக் கூடும்.  பழச்சாறை அடிக்கடி குடித்தால், பற்கள் பாதிக்கப்படும்.
  • ஆனால், பழங்களை கடித்து சாப்பிடும்போது, பற்கள் வலிமை பெறும்.
  • பழச்சாறு அருந்துவதால் செரிமான பிரச்னையும் ஏற்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.