மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டில்…

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை மேலமடை பகுதியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுப்பது,

சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு அரசை பாராட்டுவது, ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்த அமைச்சருக்கு நன்றி கூறுவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் தலைவர் ராஜசேகர், ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோருதல், உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.