சென்னை கொளத்தூரில் வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் பூர்வகுடி மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொளத்தூரில் மேம்பாலம் மற்றும் பூங்கா கட்டுவதற்காக எந்தவித முன்னறிவிப்பு இல்லாமலும், மாற்று இடமும் வழங்காமலும் வீடுகள் இடித்து அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்த அவர்,
கடந்த 50 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களை பற்றி எதையும் யோசிக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தமிழ்நாடு அரசு திடீரென இடித்து தள்ளியிருப்பது வேதனையாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வை நகரில் வசித்தவர்களுக்கு மாற்று இடம் மற்றும் உரிய நிவாரண உதவிகளை வழங்கி, பின்பு வீடுகளை இடித்து இருந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது எனவும்,
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்களை பாதிக்கும் இதுபோன்று திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கொளத்தூர் அவ்வை நகரில் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நியாயம் வழங்க வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.








