பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை முன் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டில், பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியானது. வெளிநாடுகளில், வரி ஏய்ப்பு செய்தும் பொருளாதாரத் தடைகளை மறைத்து சொத்துகளை வாங்குவதற்கும் ஏற்பாடு செய்துகொடுக்கும் நிறுவனம் இது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்ததன் மூலம், வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்களை வாங்கிய, ஏராளமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட 500 பேரின் பெயர்கள் வெளியாயின. அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட 300 இந்தியர்கள் பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பனமா பேப்பர்ஸ் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து அமலாக்கத்துறை முன் ஐஸ்வர்யா ராய் ஆஜராகியுள்ளார்.
வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.
அமலாக்கத்துறை ஏற்கனவே இது தொடர்பாக 2 முறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தபோது, ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.