தமிழ் நாட் சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசார்கள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவால் அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜயும், 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனை தொடர்ந்து தமிழ் நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது.
மேலும் அமைச்சரவை பட்டியலும் வெளியாகியுள்ளது. அதன் படி தவெகவை சார்ந்த ஸ்ரீ நாத், மரிய வில்சன் உள்ளிட்ட 21 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும் என இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா தொடங்கியுள்ளது. விழாவின் தொடக்கத்தில் முதலில் வந்தே மாதரவ்ம், தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய்வாழ்த்து ஆகியவை பாடப்பட்டது.
முதலைச்சர் விஜய் முன்னிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க புதிய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.







