தமிழ் நாடு அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள்…!

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழ் நாடு அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ் நாட்டின் முதலமைச்சராக கடந்த 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். மேலும் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

இதனை தொடர்ந்து இன்று தமிழ் நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன் படி தவெகவை சேர்ந்த 21 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 23 பேர் அமைச்சராக பதவியேற்கின்றனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அமைச்சரவை பட்டியலின் படி விஜய் தலைமயிலான அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர்.

எஸ்.கமலி (அவினாசி தொகுதி), சி.விஜயலட்சுமி (குமாரப்பாளையம்), கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா (சிவாகாசி) பதவி ஏற்று இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.