சி.பா. ஆதித்தனார் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சி.பா. ஆதித்தனார் பாமரரும் உலக நடப்புகளைப் படித்தறிய ஏதுவாக எளிய மொழிநடையில் இதழியலை மாற்றியவர் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவி;, “’செயற்கரிய செய்த பெரியார்’ எனத் தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் திரு. சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள்!

பாமரரும் உலக நடப்புகளைப் படித்தறிய ஏதுவாக எளிய மொழிநடையில் இதழியலை மாற்றியவர். இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்; பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது சட்டப்பேரவைத் தலைவர்; முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சர் எனத் தடம் பதித்தவர்.

தமிழ் மொழிக்கும் தமிழ் இதழியலுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஐயா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.