முக்கியச் செய்திகள் இந்தியா

6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் அந்தேரி கிழக்கு, பீகார்-மோகமா, கோபால்கஞ்ச், ஹரியானா- ஆதம்பூர், தெலுங்கானா- முனுகோட், உத்தரபிரதேசம்- கோலா கோக்ராநாத், ஒடிசா- தாம்நகர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், தேர்தலுக்கான முடிவுகள் வரும் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டும். தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 14ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 15ம் தேதிஇ வேட்புமனுவை திரும்ப பெறுவதற்காக கடைசி தேதி அக்டோபர் 17ம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊராட்சி மன்ற பெண் தலைவரை சாதியரீதியதாக திட்டியதாக அதிமுக பிரமுகர் மீது புகார்

Jeba Arul Robinson

புதுவை மின்ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு; பணிக்கு திரும்ப அமைச்சர் வேண்டுகோள்

G SaravanaKumar

ஃபார்முக்கு திரும்பினார் டேவிட் வார்னர்.. ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

Halley Karthik