முக்கியச் செய்திகள் இந்தியா

கொல்கத்தாவில் மகிஷாசூரனுக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைக்கு கீழே மகிஷாசூரன் சிலையை வைப்பதற்கு பதிலாக மகாத்மா காந்தியின் சிலையை வைத்ததை அடுத்து சர்ச்சை எழுந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை அடுத்து, மகாத்மா காந்தியின் சிலையை விழா ஏற்பாட்டாளர்கள் அகற்றினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக்கு அகில இந்திய ஹிந்து மகாசபை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக துர்கா சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு கீழே மகிஷாசூரனுக்கு பதிலாக மகாத்மா காந்தியின் கழுத்தளவு சிலை வைக்கப்பட்டிருந்தது.

இது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் இந்தப் புகைப்படம் வைரலானது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் காந்தி சிலையை உடனடியாக அகற்றுமாறு அழுத்தம் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து காந்தியின் கழுத்தளவு சிலை அகற்றப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கண்டனம் தெரிவித்தன.

பெங்கால் மாகாண ஹிந்து மகா சபா தலைவர் கூறுகையில், “என்ன நடந்ததோ அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அவர்கள் ஹிந்து மகா சபை என தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்” என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “உண்மையில் இதுபோன்று நடந்திருந்தால் அது தவறான செயலாகும்.
இது தேசப்பிதாவை அவமதிப்பது போன்றதாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு அவமானகரமானதாகும்” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையையொட்டி, பந்தல்கள் அமைத்து, சிலைகளை வைப்பார்கள். துர்கா சிலைக்கு கீழே மகிஷாசூரனுக்கு பதிலாக சமூக விரோத சக்திகளை வைப்பது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், மகாத்மா காந்தி சிலையை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

30 ஆண்டுகள் சிறை: பேரறிவாளனுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்படுமா?

Halley Karthik

கடவுச்சீட்டு மோசடி வழக்கு – தமிழ்நாடு அரசு விளக்கம்

Web Editor

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தம்!

EZHILARASAN D