உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

உதகையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தைத் தவிர,…

உதகையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தைத் தவிர, கொய்மலர் சாகுபடி மற்றும் காளான் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் விவசாயத்தை விட காளான் சாகுபடியில் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் காளான் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் குறைந்த முதலீட்டில் துவங்கப்படும் காளான் சாகுபடிக்கு இதமான வெப்பநிலை மற்றும் தேவையான அளவு நீர் தெளிக்கப்படுகிறது. அதோடு காளான் சாகுபடிக்கு தேவையான மண் மற்றும் ரசாயனங்கள் அனைத்தும் சமவெளிப் பகுதிகளிலிருந்து கொண்டு வந்து பிளாஸ்டிக் காகிதங்களில் பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு பாக்ஸ் பட்டன் காளான் ரூ.1500 முதல் 2000 வரை விற்பனையாவதால் பட்டன் காளான் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.