வணிக வளாகத்தில் தீ விபத்து: 50 பேர் பத்திரமாக மீட்பு

சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கி, துணிக்கடை, நிதி நிறுவனம்…

சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கி, துணிக்கடை, நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இன்று பிற்பகல் இந்த வணிக வளாக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த 50 பேர் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். தகவலின்பேரில், 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து. மொட்டை மாடியில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்து விசாரணை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக பெரிய அளவில் வணிக வளாகத்தில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் பாண்டிபஜாரில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.