பள்ளி வளாகத்தில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி வளாகத்தில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 6 மாதங்களாக கூடுதல் பள்ளிக்கட்டிட விரிவாக்க…

செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி வளாகத்தில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 6 மாதங்களாக கூடுதல் பள்ளிக்கட்டிட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கொத்தனார் மற்றும் சித்தாட்கள் ஆண்கள் பெண்கள் என 20க்கும் மேற்ப்பட்டோர் பள்ளி வளாகத்திலேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில், பள்ளி வளாகத்தில் மாம்பழப்பட்டு பகுதியைச் சேர்ந்த மலர் என்பவர் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த அனைவரும் இரவு 12 மணி அளவில் உறங்கிய நிலையில் கரிகாலன் என்பவர் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே, கரிகாலன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ள போலீசார் மாயமான கரிகாலனை தேடி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.