தமிழ்நாடு- பாண்டிச்சேரி பேருந்து சேவை தொடக்கம்

தமிழ்நாடு- பாண்டிச்சேரி இடையே இன்று முதல், பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் தமிழகம், புதுச்சேரியிலும் அதிகரித்து வந்ததால், தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால்,…

தமிழ்நாடு- பாண்டிச்சேரி இடையே இன்று முதல், பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் தமிழகம், புதுச்சேரியிலும் அதிகரித்து வந்ததால், தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. வழிப்பாட்டு தளங்கள் திறப்பு, உணவங்கள் கூடுதல் நேரம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பாண்டிச்சேரியிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய தினத்தில் 134 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரிக்கும் தமிழ்நாடுக்கும் இடைய இன்று பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

மாஸ்க் அணிந்து பயணிகள் பயணித்தனர். சென்னையில் இருந்து புதுவைக்கு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திண்டிவனம் என இரு மார்க்கத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.