30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்

நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று மாலை அரசு…

நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று
மாலை அரசு பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த
பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் புத்தேரி மேம்பாலம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது வளைவில் ஓட்டுநர் ஸ்டியரிங்கை வளைக்க முயன்ற போது ஸ்டியரிங் வேலை செய்யாததால் திடீரென 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பெண்கள் 5 குழந்தைகள் 10 ஆண்கள் என 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விபத்தில் சிக்கியவர்களை பேருந்து என் கண்ணாடியை உடைத்தும் ஜன்னல் வழியாகவும் வெளியே எடுத்து காப்பாற்றினார். படுகாயம் அடைந்த பயணிகள் அனைவரும் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள்
மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தொழிற்சங்க நிர்வாகிகள்
பல்வேறு புகார் அளித்தும் இதுவரை பழைய பேருந்துகள் மாற்றப்படவில்லை. இதனால் தான் இந்த விபத்து நடந்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.