நெல்லூர் அருகே பேருந்து – லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு.. 15 பேர் படுகாயம்!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி அருகே தனியார் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 8 பேர் உயிரிழந்து, 15 பேர் படுகாயமடைந்தனர்.  சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த…

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி அருகே தனியார் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 8 பேர் உயிரிழந்து, 15 பேர் படுகாயமடைந்தனர். 

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த பேருந்து மீது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி அருகே லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.  மேலும் விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட லாரி மீது மற்றொரு லாரி மோதி முதலில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இருந்து தப்புவதற்காக அந்த லாரியை ஓட்டுநர் வலது புறமாக திருப்ப முயன்ற போது எதிர் திசையில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி பேருந்து,  லாரி ஆகிய இரண்டும் கடுமையாக சேதம் அடைந்தன.  விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் மரணம் அடைந்த நிலையில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.  விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பேருந்து,  லாரிஆகிய இரண்டையும் கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.